இரு வாரங்களில் ரூ. 19.6 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை இழந்த சிறிலங்கா
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு வாரங்களில் 19.6 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறைகள், பத்திரங்களில் செய்துள்ள முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலக பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது.
இதையடுத்து, சிறிலங்காவின் திறைசேரி முறிகள், பத்திரங்களில் செய்துள்ள முதலீடுகளை வெளிநாட்டவர்கள் திடீரென விலக்கிக் கொண்டு வருகின்றனர்.
சிறிலங்கா மத்திய வங்கிய தரவுகளின்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்த ஒருவார காலத்தில், 8.23 பில்லியன் ரூபாவை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். கடந்த வாரம், 11.42 பில்லியன் ரூபா விலக்கிக் கொள்ளப்பட்டது.
இரண்டு வாரங்களில்19.6 பில்லியன் ரூபா முதலீடுகளை வெளிநாட்டவர்கள் விலக்கிக் கொண்டுள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வருவதால், வரும் நாட்களில் சிறிலங்கா பொருளாதார ரீதியாக மேலும் நெருக்கடிகளைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.