நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் -20 கைதிகள் காயம்
நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த இரண்டு கைதிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுவதற்காக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
