மேலும்

எரிபொருள் விலைகளை உயர்த்தியது சிறிலங்கா அரசாங்கம்.

சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், நடைமுறைக்கு  வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 24 ரூபா அதிகரித்து, 317 ரூபாவாக விற்கப்படுகிறது.

ஒக்டேன் 95 பெட்ரோல் விலை  25 ரூபா அதிகரிக்கப்பட்டு, 365 ரூபாவாக விற்கப்படுகிறது.

ஓட்டோ டீசலின் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 303 ரூபாவாகவும்,  சூப்பர் டீசல் விலை 24 ரூபா அதிகரிக்கப்பட்டு, 353 ரூபாவாகவும் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றருக்கு 13 ரூபா அதிகரித்து 195 ரூபாவாக விற்கப்படுகிறது.

ஈரான் மீதான போரை அடுத்து அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதை அடுத்து சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலைகளை அதிகரித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க 27 நாட்களுக்குப் போதுமான பெட்ரோலும், 33 நாட்களுக்குப் போதுமான டீசலும் கையிருப்பில் இருப்பதாக கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *