காலக்கெடுவுக்குள் ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவது சாத்தியமில்லை
ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா வழங்கியுள்ள விலக்கு ஏப்ரல் 11 ஆம் நாள் காலாவதியாகும் முன்னர், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுடன் ஏற்பாடுகளை இறுதி செய்வது கடினமாக இருக்கும் என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக சிறிலங்கா தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் காலக் கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவை இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தடுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவிற்கு 5 நாள் பயணமாக நேற்று கொழும்பை வந்தடைந்துள்ள ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ, சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
