விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் – ஆதரவாளர்களால் பதற்றம்
அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.
அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.
அமெரிக்க வங்கிகளில் தனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, காணாமற்போனவர்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நாள் தீர்மானிக்கப்பட்டதில், ஐ.நாவின் விசாரணை அறிக்கையும் முக்கிய பங்காற்றியதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிடம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் இன்று இரகசிய இடமொன்றில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்பாக, சிராந்தி ராஜபக்ச நாளை முன்னிலையாகவுள்ளார். சிராந்தி ராஜபக்சவின் ஊடக இணைப்பு அதிகாரி அனோமா வெலிவிற்ற இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன இன்று கைது செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போது சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சற்றுமுன்னர் சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.