மேலும்

Tag Archives: லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

புலிகளுடனான போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி

விடுதலைப் புலிகளுடனான மூன்று பத்தாண்டு கால போர் அனுபவங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தாயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை விட்டு ஓடியவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் – சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடியவர்களுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும், தனியார் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தவறு செய்தவர்கள் போர் வீரர்கள் அல்ல – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கு- தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை, சில சக்திகள் குழப்பி வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பு

முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முக்கிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

சிறிலங்கா இராணுவத் இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் இராணுவத் தலைமை அதிகாரியாக (Chief of Staff)  மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நேற்றுமாலை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் திட்டம்- சிறிலங்கா அதிபருக்கு விளக்கினார் இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று முதல் முறையாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார் – லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத்தினர் எந்தவொரு போர்க் குற்றங்களிலும் ஈடுபடவில்லை, ஆனாலும், எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான  ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.