மேலும்

Tag Archives: ரெலோ

யாழ்ப்பாணத்தில் நாளை ‘எழுக தமிழ்’ பேரணி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நாளை எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாண சபையைக் கலைக்க முயற்சி – சிறப்பு அமர்வில் சந்தேகம்

மேன்முறையீட்டு நீதிமன்றில் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள சூழ்நிலைகள் தொடர்பாக- வட மாகாண சபையின்  சிறப்பு அமர்வில் இன்று விவாதம் நடத்தப்பட்டது.

ரணிலுக்கு ஆதரவா? – ரெலோ உயர்குழு முக்கிய முடிவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியிடவுள்ளது.

வடக்கில் கூட்டமைப்பின் பரப்புரை தீவிரம் – பாதுகாப்பு கெடுபிடிகளால் முகம்சுழிக்கும் ஆதரவாளர்கள்

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் ரெலோ

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்த ரெலோ, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

யாரும் போகலாம், யாரும் வரலாம் திறந்தே கிடக்கிறது கதவு – கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எவரும் வெளியே செல்வதற்கு தடையில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்படவுள்ளார் சிவசக்தி ஆனந்தன்?

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு நாளை மாலை 6 மணியளவில், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயலகத்தில் கூடவுள்ளது.

வடக்கின் புதிய அமைச்சர்களாக ஜி.குணசீலன், சிவநேசன் – முதலமைச்சர் பரிந்துரை

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக, மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.