மேலும்

Tag Archives: போர்க்குற்றங்கள்

அனைத்துலக விசாரணைக்கு எதிராக சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறதாம் – சந்திரிகா கூறுகிறார்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு எதிராக, சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

ஐ.நா அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா கோரிக்கை – வொசிங்டனில் மங்கள தகவல்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைக்கு கொமன்வெல்த் வரவேற்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரானபோரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை கொமன்வெல்த் அமைப்பு வரவேற்றுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல்: அவுஸ்ரேலியாவுக்கு குழப்பம் – சிட்னி மோர்னிங் ஹெரால்ட்

சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் கவனமாக, அவதானித்து வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் குறித்துப் பேசும் உரிமை மகிந்தவுக்கு கிடையாது – சம்பிக்க ரணவக்க

போர்க்குற்றங்கள் குறித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது சிறிலங்காவின் கடமை – ஐ.நா

போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா நடத்தும் விசாரணைகளுடன் ஒத்துழைக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

போர் வெற்றிக்குப் பங்களித்த அனைவரையும் பாதுகாப்பேன் – மைத்திரி வாக்குறுதி

தாம் வெற்றி பெற்றால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் எவரையும் முன்னிறுத்த அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு, இராணுவம் மீதான போர்க்குற்ற ஆதாரங்கள் ஐ.நா விசாரணைக்குழுவிடம் ஒப்படைப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சாட்சியங்களுடன் கூடிய விரிவான அறிக்கை ஒன்று, அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தினால், ஐ.நா விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்? – இந்திய மனித உரிமை ஆர்வலர் கேள்வி

மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்து விட்டு, அதே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களைத் தண்டனை அனுபவிக்க வைப்பது என்ன நியாயம் என்று இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌசல் கேள்வி எழுப்பியுள்ளார்.