மேலும்

Tag Archives: படுகொலை

கொலைச் சதித்திட்டம் தொடர்பாக கைதான இந்தியரின் உயிருக்கு அச்சுறுத்தல்

குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, இந்தியரான மெர்சலின் தோமஸ் தெரிவித்துள்ளார்.

மைத்திரி கொலைச் சதி – நாமல் குமாரவின் அலைபேசியை சீனாவுக்கு அனுப்ப முடிவு

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்ட நாமல் குமாரவின் அலைபேசியை தடயவியல் ஆய்வு செய்வதற்கு, சீன நிபுணர்களிடம் உதவி கோர சிறிலங்கா அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைதான இந்தியர் ‘றோ’ உளவாளியே – விபரங்களை வெளியிட்டார் விமல் வீரவன்ச

சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர்  மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர், இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் ஒரு உறுப்பினர் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மோடியுடன் தொலைபேசியில் பேச்சு – விளக்கமளித்தார் மைத்திரி

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ தொடர்புபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து- நேற்றுமாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு, பேசியுள்ளார்.

மைத்திரி – மகிந்த இரகசியச் சந்திப்பு?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாலக சில்வாவின் பணியகத்துக்கு முத்திரை – இரு மடி கணினிகளும் விசாரணையில்

கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் பணியகம், முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம் இன்றும் நாளையும் விசாரணை

சிறிலங்கா அதிபர் மற்றும் முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம், இன்றும் நாளையும் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கு – மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா? – மங்கள கேள்வி

தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.