மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் கட்சி போட்டியிடுவதாக, தமிழ் அரசுக் கட்சியின் இணைச்செயலரும், வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி மாவட்ட ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் கூட்டமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்த ரெலோ, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான துரைராசா ரவிகரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.