மேலும்

Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஐ.நா விசாரணை அறிக்கை தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்தல்

போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையின் அறிக்கை, ஏற்கனவே திட்டமிட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு

போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து ஐ.நாவின் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்

அனைத்துலக சமூகத்தினால் மதிக்கப்படும் நிலைமைக்கு சிறிலங்கா மீண்டும் வந்துள்ளதாக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர்  அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழுவுடன் கூட்டமைப்பு அவசர சந்திப்பு – அறிக்கையை பிற்போடக்கூடாது என்று கோரிக்கை

சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை, திட்டமிட்டபடி அடுத்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா விசாரணைக் குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்டாசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – சம்பந்தன் விளக்கம்

கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் தாம் பங்கேற்றதை நியாயப்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் சம்பந்தன் – கூட்டமைப்புக்குள் சர்ச்சை

கொழும்பில் இன்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றுள்ளார்.

யாழ். செல்லவில்லை நிஷா பிஸ்வால் – சிறிலங்கா பயணம் நிறைவு

தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்குச் செல்லாமல் இன்றுடன் தனது சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு

சிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது.

கிழக்கு முதல்வர் பதவி குறித்து மைத்திரி, ரணிலுடன் கூட்டமைப்பு பேச்சு

கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு சரியானதே என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழர் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க முன்வர வேண்டும் – இரா. சம்பந்தன் கோரிக்கை

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையை அவசர விடயமாகக் கருதி தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.