மேலும்

Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நாளை காலையில் கூட்டமைப்பைச் சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வரவுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் யாருக்கு?- சம்பந்தன் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என்று, அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரின் ஒற்றுமை குலைந்தால்….

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கப் போகிறவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலையில் ஆரம்பமாகப் போகிறது. 

வாக்காளர்களைக் குழப்பியுள்ளார் விக்னேஸ்வரன் – ‘தினக்குரல்’ ஆசிரியர் கருத்து

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது கடைசி வாய்ப்பு – யதீந்திரா

தமிழ்த் தேசிய அரசியல் சூழல், நாடாளுமன்றத் தேர்தலின் அனைத்துலக முக்கியத்துவம், கூட்டமைப்பின் அரசியல் போக்கு, திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் நிலவரம் போன்றன குறித்த ‘புதினப்பலகை’யின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளரும், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான ஆ.யதீந்திரா.

கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்தி கிட்டும்; ஆனால் பதவிக்காக பல்இழிக்கமாட்டார்கள் – பசீர் சேகுதாவூத்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்கும். ஆனால் அது பதவிக்காக பல் இழிக்கும் கட்சி அல்ல. இனத்தின் விடுதலை, இனத்திற்கு, இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தரும் உடன்பாட்டோடு தான் அவர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள்.

யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் கைப்பற்றும் கூட்டமைப்பு – சுமந்திரன் நம்பிக்கை

வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

குறுக்குவழியில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க சதி – ஆயிரக்கணக்கில் சிக்கிய போலி வாக்குச்சீட்டுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான போட்டி உருவாகியிருக்கின்ற நிலையில், கந்தளாயில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….!

மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல். 

விக்னேஸ்வரனின் பக்கசார்பின்மை எழுப்பும் கேள்விகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன.