மேலும்

Tag Archives: சிறிலங்கா பொதுஜன முன்னணி

கொழும்பு அரசியலில் பரபரப்பு – தனித்து ஆட்சியமைக்கத் தயாராகும் ஐதேக

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள பெரும் வெற்றியை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனித்து ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஐதேக இறங்கியு்ள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தக் கோருகிறார் மகிந்த

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

மீண்டும் மகிந்த அலை – 42 வீத வாக்குகளுடன் முன்னிலையில்

சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 42 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 359 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

சுதந்திரக் கட்சிக்கு காத்திருக்கும் பேரிடி – 7 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்ற வாய்ப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியுடன் நிபந்தனையுடன் பேசத் தயாராகிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் மகிந்த

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சியமைக்க வருமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

தவறு செய்து விட்டேன்- என்கிறார் மகிந்த

பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் தாம் தவறு செய்து விட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றிய சிறிலங்கா காவல்துறை

மதவாச்சியில் சிறிலங்கா பொதுஜன முன்னணி செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் படங்களுடன் கூடிய தேர்தல் பரப்புரைப் பதாகைகள், சுவரொட்டிகள் சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளன.

அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் – புலம்பும் மகிந்த

2015 அதிபர் தேர்தலில் தான், தோற்கவில்லை என்றும் அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – சுதந்திரக் கட்சிக்கு மகிந்த அணி நிபந்தனை

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதானால், ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி.