மேலும்

Tag Archives: சிங்கப்பூர்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார் – முதலமைச்சருடனும் சந்திப்பு

ஐந்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அவசர உதவிப் பொருட்களை வழங்கினார் இஸ்ரேலிய தூதுவர்

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் அவசர உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்று சந்தித்த இஸ்ரேலிய தூதுவர் டானியல் கார்மன் இந்த உதவிப் பொருட்களைக் கையளித்தார்.

இந்தியாவுடன் அல்ல, இந்திய நிறுவனத்துடனேயே உடன்பாடு செய்வோம் – சிறிலங்கா பிரதமர்

இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது குறித்த கொள்கை ரீதியான முடிவே எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா பிரதம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் இடம்பெயர்ந்த மக்கள்

சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்று  எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதுடன் தமது வாழ்விடங்களையும் மீளக்கட்டியெழுப்பி வருகின்றனர்.

மகிந்தவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மறுத்த சிங்கப்பூர்

அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, தனியான பாதுகாப்பு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ்  ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு- சிங்கப்பூர் பிரதமர் நம்பிக்கை

சிறிலங்காவுடன் இந்த ஆண்டில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்கள் முதலீடுகளை பாதிக்கும் – சீனத் தூதுவர் எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கைத்தொழில் முதலீட்டு வலயத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே இணங்கியிருந்த முதலீட்டாளர்களைத் திசை திருப்பி விடும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் எச்சரித்துள்ளார்.

ஐந்து இந்திய மாநிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்பாடுகள் – சிறிலங்கா திட்டம்

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு நடைமுறையில் இருக்கும் நிலையில், எட்கா உடன்பாட்டையும் செய்து கொள்ளவுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் தனித்தனியாக உடன்பாடுகளையும் செய்து கொள்ளவுள்ளது.

கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு சீன இராணுவத்திடமா? – ரணில் பதில்

நிதி நகரம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையும், விமானப்படையுமே உறுதிப்படுத்துதே தவிர, சீனர்கள் அல்ல என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எட்கா உடன்பாடு குறித்துப் பேச சிறிலங்கா வருகிறார் இந்திய வர்த்தக அமைச்சர்

எட்கா உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியாவின் வர்த்தக அமைச்சர் வி்ரைவில் சிறிலங்கா வருவார் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.