மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

அமெரிக்க விசாரணையை தவிர்க்கவே குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை தாம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கையளித்துள்ளதாக கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முக்கிய தலைவர்கள் மெதமுலானவுக்கு வரவில்லை – மகிந்தவுக்கு ஏமாற்றம்

மெதமுலானவில் இன்று நடத்திய கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்காதமை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாவின் குடியுரிமை பறிக்கப்படும்?

மிக்-27 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டால், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குடியுரிமையை இழக்க நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம் – எச்சரிக்கிறார் கோத்தா

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

கோத்தாவின் தந்திரோபாய நகர்வு – இந்தியன் எக்ஸ்பிரஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது சகோதரரான மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில், தாம் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்திருப்பதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லையாம் – என்கிறார் கோத்தா

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தம்மால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு ஓடமாட்டாராம் கோத்தா

தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு எதிராக அடுத்தடுத்துப் பாயவுள்ள குற்றவியல் வழக்குகள்

முறைகேடான வகையில் ஆயுதங்கள் மற்றும் போர்த்தளபாடக் கொள்வனவுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சஜின் வாஸ் குணவர்த்தன கைது? – கோத்தாவிடம் இன்றைய விசாரணை முடிந்தது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன இன்று கைது செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.