மேலும்

Tag Archives: காங்கேசன்துறை

முதலமைச்சருடன் அரசியல் பேசுவதை தவிர்த்த இந்தியத் தூதுவர்

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போது, அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

எனது ஆணையை மீறியே காங்கேசன்துறையில் இருந்து இரும்பு எடுத்துச் செல்லப்பட்டது – தயா ரத்நாயக்க

இராணுவத் தளபதியாக இருந்த தனது ஆணையை மீறி ஒரு குழுவினர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பாரிய இயந்திரங்களை உடைத்து, பழைய இரும்புக்காக விற்பனை செய்தனர் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க சாட்சியம் அளித்துள்ளார்.

சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை விற்ற மோசடி- முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது சுங்கப் பணியகம்

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் சிறிலங்கா சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது.

காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியை திறக்க சிறிலங்கா இராணுவம் இணக்கம்

மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காங்கேசன்துறை – தொண்டைமானாறு இடையிலான வீதியை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் மீளத்திறந்து விடவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உறுதியளித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினரிடம்

யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலர் அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் தொடங்கிய சிறிலங்கா இராணுவத்தின் பாரிய களப்பயிற்சி சூரியவெவவில் நிறைவு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் காங்கேசன்துறையில் ஆரம்பித்த பாரிய களப் பயிற்சி ஒத்திகை சூரியவெவவில் நேற்று முடிவுக்கு வந்தது.

கொழும்பு, காங்கேசன்துறை, திருமலை துறைமுகங்களில் இந்தியா முதலிடலாம் – அர்ஜூன ரணதுங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில். சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிதம்பரத்துக்கான திருவாதிரை கப்பல் சேவை திட்டம் ரத்து

சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் ஈழத்து பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு நடத்தத் திட்டமிட்டிருந்த பயணிகள் கப்பல் சேவை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.