மேலும்

Tag Archives: கரு ஜெயசூரிய

கருவின் தொலைபேசி அழைப்பு நினைவில் இல்லை- விசாரணையில் மழுப்பிய மகிந்த

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சபாநாயகருமான கரு ஜெயசூரிய தனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தாரா என்று ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

மாகாண சபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் இல்லை – கைவிரித்தார் சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

விஜயகலாவை விசாரிக்க சபாநாயகரிடம் அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம், விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சிறிலங்கா காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாளை முடிவு?

மாகாணசபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்று நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் நாளை முடிவு செய்வார்கள் என சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று அறிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து இந்த வாரம் முடிவு

மாகாணசபைகளுக்குத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கவுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் – சபாநாயகர் கரு ஜெயசூரியவிடமும் வாக்குமூலம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினால் மட்டுமே பதவி விலகுவேன் – ரணில் திட்டவட்டம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாத்திரமே, தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறுவேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் பதவியேற்கிறது புதிய ஐதேக அமைச்சரவை

கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியுள்ள நிலையில், நாளை மறுநாள், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கரு ஜெயசூரியவும், சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை நிராகரிப்பு

கூட்டு அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது, அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும்படி முன்மொழியப்பட்ட யோசனையை அவர்கள் இருவரும் நிராகரித்துள்ளனர்.