மேலும்

Tag Archives: ஈஸ்டர்

வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்

ஒருதொகை வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர் என்றும், அவர்களின் உதவியுடன்  நாட்டில் விரைவில் வழமை நிலையை அரசாங்கம் கொண்டு வரும் என்றும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் மல்லுக்கட்டப் போகும் பூஜித ஜயசுந்தர

நியாயமான காரணங்களின்றி தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்ப சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்ய சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர முடிவு செய்துள்ளார்.

குண்டு நிபுணர்கள் கொல்லப்பட்டு விட்டனர் – இனி யாரும் இல்லை என்கிறது காவல்துறை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய – குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் இருவரும், அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டு விட்டனர் என்று சிறிலங்கா பதில் காவல்துறை மா அதிபராக சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ட்ரோன்  கருவிகளை பறக்க விடத் தடை

ட்ரோன் உள்ளிட்ட அனைத்து விமானியில்லா விமானங்களும் பறக்கவிடப்படுவதற்கு சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தடைவிதித்துள்ளது.

ஒரே ஒரு பயணியுடன் கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாதுகாப்பை தளர்த்த வேண்டாம் – படையினருக்கு ரணில் அறிவுறுத்தல்

நாடு முழுவதும், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை எந்த வகையிலும் தளர்த்த வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு புலனாய்வு எச்சரிக்கை – தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தேவாலயங்களில் நாளை மீண்டும் ஆரம்பமாகவிருந்த, ஞாயிறு திருப்பலி ஆராதனைகளை கத்தோலிக்கத் திருச்சபை ரத்துச் செய்துள்ளது.

சீன விஞ்ஞானிகள் நால்வரும் கொழும்பு குண்டுவெடிப்பில் பலி

சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், சீன விஞ்ஞானிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்களுடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு – சிறிலங்கா தளபதியின் பெயரில் பாகிஸ்தான் குசும்பு

பாகிஸ்தானைத் தளமாக கொண்ட பாகிஸ்தான் இராணுவ ஆதரவு கீச்சகப் பதிவர்கள், போலியான சிறிலங்கா கீச்சக கணக்குகளின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை

ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு  தெரியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.