மேலும்

Tag Archives: இலங்கை

சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும்- மன்னார் ஆயர் சார்பாக அறிக்கை

தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளை  தெரிவு  செய்வதன் மூலம், சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் சார்பாக- மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஏ.விக்டன் சோசை அடிகளார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயார் – என்கிறார் ரணில்

தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

படைவிலக்கம்: தீர்க்கமான நடவடிக்கை அவசியம் – ‘தி இந்து’ ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி அதிபர் பதவியை மைத்ரிபால சிறிசேனா கைப்பற்றுவதற்கு முக்கியமான காரணம், நாட்டின் சிறுபான்மை யினரான தமிழர்களும் முஸ்லிம்களும்.

நடுக்கடலில் 54 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்ரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இன்று தமிழரின் தேசிய துக்க நாள்; விளக்கேற்றி உறவுகளுக்கு அஞ்சலிப்போம் – இரா.சம்பந்தன்

இன்றைய நாள் தமிழரின் தேசிய துக்க நாள். போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாள். இந்த நாளில், இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்களின் வேதனை

ஆல்பிரட்டின் தாய்க்கு, ‘என்றாவது ஒரு நாள் இலங்கைக்குத் திரும்புவோம்’ என்ற கனவு இருந்தது. ஆனால் தற்போது, “இலங்கைக்குத் திரும்பி வருவது என்ற முடிவின் மூலம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டேன் என்று பிள்ளைகள் என்னைக் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் ஆல்பிரட்டின் தாய்.

தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் மோடியின் வாழ்த்துச் செய்தி

சிறிலங்காவின் 67வது சுதந்திர நாளையொட்டி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை மக்களுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.