மேலும்

முப்படைத் தளபதிகளையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் – சரத் பொன்சேகா கோரிக்கை

தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டத்துடன் தொடர்புடைய முப்படைகளினதும் தளபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

“இறுதிப்போரில் இடம்பெற்றது இனப்படுகொலையே“ – வடக்கு மாகாணசபையில் வரலாற்றுத் தீர்மானம்

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், வடக்கு மாகாணசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறார் தென்னாபிரிக்கத் துணை அதிபர் சிறில் ரமபோசா

தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர்  ஜொவ் டொட்ஜ் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஓய்வூதியத்தை இழக்கும் ஆபத்தில் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா நாடாளுமன்றம் ஏப்ரல் 23ம் நாளுக்கு முன்னதாக கலைக்கப்பட்டால், 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகைமையை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸ் வங்கிகளில் 58.3 மில்லியன் டொலரைப் பதுக்கியுள்ள இலங்கையர்கள்

சுவிற்சர்லாந்து வங்கிகளில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஹியூகோ ஸ்வரை சந்தித்தார் மங்கள

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவில் ஏப்ரல் 4ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல்?

சிறிலங்கா நாடாளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்பட்டால், வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா பாதுகாப்புச்செயலருடன் இந்திய துணைத் தூதர் சந்திப்பு

வடக்கு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை, இந்தியத் துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடற்புலிகள் உருவாக்கிய கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்த்த இந்தியக் கடலோரக் காவல்படை

அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.

ரணிலுக்கு எதிராக மகிந்தவை முன்னிறுத்த நான்கு கட்சிகள் விருப்பம்

நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் இன்று விருப்பம் வெளியிட்டுள்ளன.