மேலும்

அதிபர் தேர்தலுக்குப் பின் அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா நம்பிக்கை

அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் பின்னர், சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார், அமெரிக்காவுக்கான சி்றிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம்.

முதலமைச்சர் எதிர்த்தாலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுமாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் நாளை சிறிலங்கா வருகிறார்

நியூசிலாந்து பிரதமர் ஜோன் பிலிப் கீ, ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார். நாளை தொடக்கம், வரும் 27ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான உடன்பாட்டை எதிர்ப்பவர்கள் துரோகிகள் – என்கிறார் ரணில்

இந்தியாவுடன் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார தொழில்நுட்ப உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞர் ‘மாமனிதர்’ அரசையா அவர்களின் உடல் தீயுடன் சங்கமம்

ஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞரும், கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, வாழும் காலத்திலேயே மாமனிதர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவருமான, எஸ்.ரி.அரசு மற்றும் அரசையா என அழைக்கப்படும், சிவக்கொழுந்து திருநாவுக்கரசு  அவர்களின் உடல் இன்று தீயுடன் சங்கமமானது.

பசில் ராஜபக்சவினால் பிளவுபடும் நிலையில் கூட்டு எதிரணி

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில், பசில் ராஜபக்சவினால் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கேட்கிறது சீனா

அம்பாந்தோட்டையில் சிறப்பு முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு, ஆயிரம் ஏக்கர் நிலத்தை தர வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு மாகாணசபைக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம்

மத்திய அரசாங்கத்துடன் வடக்கு மாகாணசபை, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இந்தியாவும் மேற்குலகமும், அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குடாநாட்டு மக்களை மிரள வைத்த மிக் போர் விமானங்கள் – வழக்கமான பயிற்சி என்கிறது விமானப்படை

சிறிலங்கா விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் கடந்தவாரம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது பறந்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்திய நிலையில், அது ஒரு வழக்கமான பயிற்சி நடவடிக்கை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

ஞானசார தேரர் மீது பாய்ந்தது சாட்சிகள் பாதுகாப்பு சட்டம்

அண்மையில் உருவாக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.