மேலும்

மே-18 இல் வெற்றிவிழா இல்லை – போரில் மரணித்த அனைவரையும் நினைவு கூர ஏற்பாடு

வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இந்தியாவின் கண்காணிப்பு ரேடர்கள் – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

சிறிலங்காவில் இந்தியா கடலோரக் கண்காணிப்பு ரேடர்களையும், தன்னியக்க அடையாளப் பொறிமுறைகளையும் நிறுவியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள சீனா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனா 200 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கியிருந்தது. இது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் காணப்படவில்லை.

தமிழர்களை வெற்றி கொள்வது எப்படி?- பலாலியில் படையினருக்கு பாடம் கற்பித்த ருவான்

சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக நீடித்த போருக்கு, மொழிப் பிரச்சினை முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

’18 பில்லியன் டொலர்’ குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்- நாமல் சவால்

தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 8 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

புனேயை விட்டுப் புறப்பட்டது சிறிலங்கா விமானம் – இந்திய அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு

பாகிஸ்தானில் இருந்து குதிரைகளை ஏற்றி வந்த சிறிலங்கா விமானப்படை விமானம், நேற்று அதிகாலையில், புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே, இந்திய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மீண்டும் விரைவில் மேடைக்கு வருவேன் என்கிறார் மகிந்த

தாம் விரைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேடைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு

சிறிலங்கா இராணுவத்தில் இருந்த, அதிபர் பாதுகாப்புப் பிரிவு (President’s Guard) கலைக்கப்பட்டு, அதிலிருந்து படையினர், தத்தமது படைப்பிரிவுகளுக்குச் செல்லப் பணிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் டேவிட் கமரொன் – 4 இலங்கையர்களில் ஒருவரே வெற்றி

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் டேவிட் கமரொன் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது.