மேலும்

கொழும்பில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அடிநிலைச் செயலரான பற்றிக் கென்னடி என்ற உயர் அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.

சுவிஸ்- லொசான் மாநகரசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார் ஈழத்தமிழர் நமசிவாயம்

லொசான் மாநகரசபைக்கு நேற்று (பெப்ரவரி 28) நடைபெற்ற தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பயணம் குறித்து 31ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மௌனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நிகழ்த்திய உரையில் எதுவும் குறிப்பிடாமல் மௌனம் காத்துள்ளார்.

அனைத்துலக செஞ்சிலுவை சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிறிலங்கா வருகிறார்

அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எல்ஹாட்ஜ் அஸ் சை மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

யோசிதவின் விளக்கமறியல் உத்தரவை ரத்துச்செய்ய மேல் நீதிமன்றம் மறுப்பு

யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதென கட்டளை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கட்சிக்குள் மகிந்த அணியினரை ஓரம்கட்டும் மைத்திரி – 26 புதிய அமைப்பாளர்கள் நியமனம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த அமைப்பாளர்களை அதிரடியாக நீக்கியுள்ள, கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன, புதிதாக 26 மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையில் இருந்து லெப்.யோசித ராஜபக்ச இடைநிறுத்தம்

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்.யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கில் சமஸ்டித் தீர்வை உருவாக்க இந்தியா தலையிட வேண்டும் – விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்க இந்தியா தலையீடு செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

லசந்த படுகொலை – 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 40இற்கும் அதிகமான அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களின் உதிரிப்பாகங்கள் கடற்படைத்தளத்தில் சிக்கின

திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட 11 இளைஞர்களை கொழும்பில் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட, இரண்டு டிபென்டர் வாகனங்களின் பாகங்கள், வெலிசறை சிறிலங்கா கடற்படைத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.