மேலும்

‘நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’–நூல் வெளியீடு

நோர்வேயில் ஈழத்தமிழர் புலம்பெயர் வாழ்வியலின் 60 ஆண்டுகள் நிறைவில் ’நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’எனும் தலைப்பிலமைந்த நூல்-,தமிழாசிரியர், கவிஞர், சமூக ஆர்வலராக நோர்வேத் தமிழர்களுக்கு அறியப்பட்ட உமாபாலன் சின்னத்துரை அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.

தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு வழக்கில் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்- ஜோன் கெரிக்கு அமெரிக்க வெளிவிவகாரக் குழு கடிதம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் எட்வேர்ட் ரொய்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டை என்னிடம் தந்தால் நிர்வகித்துக் காட்டுவேன்- என்கிறார் மகிந்த

தன்னிடம் நாட்டை ஒப்படைத்தால் நிர்வகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

அனைத்து மின்சார நிலையங்களும் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைப்பு – மைத்திரி அவசர உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் உபமின் நிலையங்களில் சிறிலங்கா இராணுவத்தினரை நிறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.

யோசித ராஜபக்சவுக்குப் பிணை – வெளிநாடு செல்லத் தடை

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கடுவெல நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சுரனிமல ராஜபக்ச மரணம்

முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா பிரதமரின் இணைப்புச் செயலருமான சுரனிமல ராஜபக்ச இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67 ஆகும்.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 07

நீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவின் நிலைமைகள் – இந்தியக் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி

சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சந்தித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்துக்கு புதிய நெருக்கடி – போட்டிக்களத்தில் சென்னை

கப்பல்களுக்கு எரிபொருளை நிரப்பும் சேவை, சென்னைத் துறைமுகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.