மேலும்

அம்பாந்தோட்டையில் 1000 ஏக்கர் நிலம் சீனாவுக்கு வழங்கப்படுகிறது

சீன நிறுவனங்களின் முதலீட்டில், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பன கைத்தொழில் வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா?- சம்பந்தன் தலைமையில் ஆலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வரும் வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, வடக்கு மாகாணசபை அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வெள்ளிக்கிழமையும் சிறிலங்காவில் விடுமுறை

எதிர்வரும் 15ஆம் நாள்- வெள்ளிக்கிழமையை அரசாங்க விடுமுறை நாளாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன வெளியிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் மீது சுவாமிநாதன் சீற்றம் – உருப்படியாக எதையும் செய்யவில்லையாம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாத வடக்கு மாகாணசபை, மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் மீள்குடியேற்ற, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

முன்னர் எதிர்த்தவர்கள் இப்போது சீனாவை நோக்கி ஓடுகிறார்கள் – மகிந்த கிண்டல்

சிறிலங்கா பிரதர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரவேற்றிருக்கிறார்.

சிறிலங்காவில் அமெரிக்க டொலருக்கு சமமான மதிப்பைப் பெறுகிறது சீனாவின் யுவான்

சிறிலங்காவில், அமெரிக்க டொலருக்கு நிகரான மதிப்பு சீனாவின் யுவான் நாணயத்துக்குக் கிடைக்கவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது இதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

துறைமுக நகரத் திட்டத்துக்கு இழப்பீடு இல்லை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தாமதிக்கப்பட்டதற்காக, எந்த இழப்பீட்டையும் சீனாவுக்குச் செலுத்த வேண்டியதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன்பொறியில் இருந்து தப்பிக்க சீனாவின் நிபந்தனைகளை ஏற்கும் சிறிலங்கா

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளாலும் வர்த்தக மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இந்திய மாக்கடலில் தனது இருப்பை நிலைப்படுத்துவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா தேவைப்படுகிறது.

அடுத்த ஆண்டு சிறிலங்கா வரும் சீனப் பிரதமர் சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவார்

அடுத்த ஆண்டு சீனப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன் போது, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் இந்திய- சீன மோதல் ஏற்படாது – சிறிலங்கா பிரதமர்

இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மோதல் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.