மேலும்

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம் – ஒன்பது பேர் இதுவரை கைது

சாவகச்சேரி, மறவன்புலவில் கடந்த மாத இறுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை, ஒன்பது பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் திட்டம் – தமக்குத் தெரியாது என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இதுவரையில் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படாத நிலையில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாலம் அமைப்பது குறித்து தகவல்களை தெரிவிப்பது அர்த்தமற்றது என்று சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

நவிபிள்ளையை எச்சரித்து விட்டு போரைத் தீவிரப்படுத்திய மகிந்த – கனடாவில் வெளிவந்த உண்மை

தமது நாட்டில் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் பாரிய நடவடிக்கையை தாம் முன்னெடுப்பதாகவும், அதற்காகத் தன்னை நான் விமர்சனம் செய்யக் கூடாது என்றும், சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

துறைமுக நகரத் திட்டத்தில் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் – சீனா கூறுகிறது

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில், இன்னமும் தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொருத்து வீடுகள் அமைக்கும் ஒப்பந்தம் மிட்டல் நிறுவனத்துக்கே – சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்தப் பணியை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஜூனில் அறிவிப்பு

சிறிலங்காவின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான திட்டம் வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் குறித்து விரைவில் உடன்பாடு – நிதின் கட்கரி

தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இந்தியாவும் சிறிலங்காவில் விரைவில் உடன்பாடு ஒன்றுக்கு வரும் என இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்கள்

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஜேஎஸ் மகினாமி, ஜே.எஸ்சுசனாமி ஆகிய போர்க்கப்பல்களே கொழும்பு வந்துள்ளன.

மக்களின் நலன் கருதிச் செயற்படும் இந்தியா – சம்பந்தன் நம்பிக்கை

சம்பூர் அனல் மின் திட்ட விவகாரத்தில், அந்தப் பகுதி  மக்களின் நலன் கருதி இந்தியா சிந்தித்து செயற்படும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

பலம்மிக்க கூட்டணியை உருவாக்கிய வைகோ வாக்குச்சேகரிப்பில் வெற்றி காண்பாரா?

1989 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் போன்றில்லாமல் தற்போதைய தேர்தல் களம் மாறு பட்டிருக்கிறது.  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதில், இந்த முறை நமக்கான வாய்ப்பு என்று கணக்கிட்டிருந்த திமுகவிற்கு தற்போதைய தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.