மேலும்

கேரளா- சிறிலங்கா இடையே விரைவில் சுற்றுலாப் பயணிகள் கப்பல்சேவை

இந்தியாவின் கேரள மாநிலத்துக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊழல் விசாரணைகளை நிறுத்துமாறு மகிந்த விடுத்த கோரிக்கை மைத்திரியால் நிராகரிப்பு

தனது ஆதரவாளர்களுக்கு எதிரான ஊழல் மோசடி விசாரணைகளை நிறுத்துமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் – வெலிக்கடைக்கு அனுப்பினார் நீதிவான்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் மே 20ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்காவிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப்படுவதற்கான முயற்சியின் விளைவாக பொதுத் தேர்தலை செப்ரம்பருக்கு முன்னர் நடத்துமாறு கொழும்பிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

சீன – சிறிலங்கா உறவில் தேவையற்ற இடையூறு – சீனா கருத்து

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் செப்ரெம்பரில் வெளியாகிறது

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் ஒன்று வரும் செப்ரெம்பர் மாதம் வெளிவரவிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

இம்மாத இறுதியில் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இந்த மாத இறுதியில் கலைக்கப்பட்டு புதுிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இன்று தேர்தல் – உமா குமரனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு?

பிரித்தானியாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் உள்ள ஹரோ ஈஸ்ட் தொகுதியில் போட்டியிடும், ஈழத்தமிழ் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

மைத்திரியிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்த மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்திய பேச்சுக்களின் போது, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தரப்பினால், ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் பாதுகாப்புக்குப் பொறுப்பான கேணல் மகேந்திர பெர்னான்டோவிடம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான, கேணல் மகேந்திர பெர்னான்டோ, சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவினால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.