மேலும்

கொழும்புத் துறைமுகத்தில் இரண்டு ஜப்பானியப் போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின், இரண்டு போர்க்கப்பல்கள் இன்று நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளுக்கான பயணமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

முன்னாள் இந்திய இராஜதந்திரி பார்த்தசாரதி யாழ். படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவின் ஓய்வுபெற்ற மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி மற்றும், புதுடெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் அசோக் மாலிக் ஆகியோர், நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

பிரித்தானியா புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

லண்டனில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஜெனிவா செல்ல முயன்ற 10 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

போலிக் கடவுச்சீட்டுகளுடன், பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வியட் ரைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள்

முல்லைத்தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் சூரியக் கதிரின் வெப்பத்தால் சூடாகி இருந்த வேளையில் நாங்கள் செல்வராஜியின் வீட்டிற்குச் சென்றோம். அவரது சிறிய வீட்டின் சுவர்களின் ஊடாக, அவரது கடந்த காலத் துன்பகரமான வாழ்வின் கரிய நிழல்களைக் காண முடிந்தது.

கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டுகிறது சிறிலங்கா கடற்படை

பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவில், புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது.

அக்கரைப்பற்று இராணுவ முகாம் பதிவேடுகளை ஒப்படைக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடைசியாக கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும், அக்கரைப்பற்று இராணுவ முகாமுக்கு, வந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பனாமா ஆவணங்கள் – குற்றச்சாட்டை மறுக்கிறார் மேஜர் நிசங்க சேனாதிபதி

வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தாம், வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கவில்லை என்று மறுத்துள்ளார் அவன்ட் கார்டே பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி.

மகிந்த மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை – சிறிலங்கா சுதந்திரக் கட்சி குத்துக்கரணம்

கிருலப்பனையில் நடந்த கூட்டு எதிரணியின் மேநாள் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காது என்று, அந்தக் கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தாஜுதீன் கொலை – மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மூன்று மணிநேரம் விசாரணை

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம், மூன்று மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.