மேலும்

நாடாளுமன்றக் கலைப்பு மே மாதம் வரை தாமதமாகலாம் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமடையலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார்.

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத்தை நிறுத்துமாறு சீனாவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தா விட்டால், சீன நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி

சிறிலங்காவுக்கு அடுத்தவாரம் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

அரசியலைக் கைவிட்டார் பசில்- சிறிலங்காவுக்கு இனித் திரும்பி வரமாட்டாராம்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்த படையினரைத் தண்டிப்பது அவசியம் – ஜெனரல் சரத் பொன்சேகா

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படுவதை தாம் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு

சீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம்  விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.

மகிந்தவின் மகனிடம் இன்று விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

வவுனியாவில் முன்னாள் ரெலோ உறுப்பினர் சுட்டுக்கொலை

வவுனியா – மகாரம்பைக் குளத்தில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடிவேலழகன் என்ற 45 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

ஐ.நா உயர் பிரதிநிதி ரணிலுடன் சந்திப்பு – விசாரணையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்

சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.