மேலும்

சலாவ முகாமில் இருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்கப்படவிருந்தவையா?

சலாவ இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக வெளியான செய்திகளை, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை – என்கிறார் ரணில்

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெடிவிபத்து குறித்து நான்கு பக்க விசாரணை – ஓரம்கட்டப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு

கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, நான்கு தரப்புகளால் சமாந்தரமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

பூகோள அமைதிச் சுட்டி – 18 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா

பூகோள அமைதிச் சுட்டியில், சிறிலங்கா ஒரே ஆண்டில் 18 இடங்கள் முன்னேறி, 97 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், பூகோள அமைதிச் சுட்டி-2016 (Global Peace Index) என்ற தரவரிசைப் பட்டியலிலேயே சிறிலங்கா 97ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றவில்லை – ஜெனிவாவில் முறையிடவுள்ளது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புலிகளின் ஈழக்கனவைத் தோற்கடிப்பேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இன்னமும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் ஈழக்கனவை முற்றாக அழிக்கப் போவதாக, சூளுரைத்திருக்கிறார்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

நம்பிக்கையில்லாப் பிரேணையைக் குழப்பிய நாடாளுமன்ற ஒலியமைப்புத் தொகுதி

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தராக அட்மிரல் தயா சந்தகிரி

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவக் குடும்பங்களுக்கான ரணவிருகம கிராமமே அழிந்தது – ஒளிப்படங்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் நம்பிக்கையிழந்து வரும் தமிழர்கள் – ஏபி

தமது நிலங்கள் மீள வழங்கப்படும் எனவும் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்கப்படும் எனவும் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது தாம் ஏமாற்றமடைவதாக கருதுகின்றனர்.