மேலும்

திவிநெகும நிதி மோசடி – பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை – சிறிலங்கா

பிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த ஐ.நா பொதுச்செயலர் யார்?

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் 31 டிசம்பர் 2016 அன்று முடிவுறவுள்ள நிலையிலேயே அடுத்த செயலாளர் நாயகத் தெரிவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

சிறப்பு நீதிமன்றக் கட்டமைப்பை தீர்மானிக்க வேண்டியது சிறிலங்காவே – ரொம் மாலினோவ்ஸ்கி

போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம்,  மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சரத் பொன்சேகா

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார் என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்- 75 பேர் பலி

பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடன் அமெரிக்கா நெருங்குவது ஏன்? – நிஷா பிஸ்வால் அளித்த விளக்கம்

சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தன்மைகள், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும்  பொருளாதாரத்தில் நெருக்கமான செல்வாக்கை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால்.

நீதிமன்றத்தை முட்டாளாக்க முயன்று நீதிபதியிடம் வாங்கிக்கட்டினார் 58 ஆவது டிவிசன் தளபதி

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலுக்குப் பதிலாக, புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பட்டியலை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த, 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியை முல்லைத்தீவு நீதிவான் கடிந்து கொண்டார்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க உதவிச்செயலர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ரணிலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள உறுதிமொழி

சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார்.