மேலும்

95 வீதமான தமிழர்கள் சமஷ்டியையே கோரினர் – விஜேநாயக்கவுக்கு தவராசா பதிலடி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் 95 வீதமான தமிழர்கள், சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர் என்று, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் பிரதிநிதியாகப் பணியாற்றிய எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரி சிறிலங்கா தளபதிகளுடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்புத் தலைமை அதிகாரிகள் குழுக்களின் தலைவரான, எயர் மார்ஷல் அஜித் பொன்ஸ்லே, சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

லசந்த கொலை வழக்கில் கைதான புலனாய்வு அதிகாரி கருணா குழுவை வழிநடத்தியவர்

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி, கருணா குழுவை வழிநடத்தியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர்களுக்கிடையில் மோதல்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில், வழக்கத்துக்கு மாறாக கண்டிய நடனத்தை உட்புகுத்த முனைந்ததால், தமிழ்- சிங்கள மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன.

சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுக்கு அமெரிக்கா நிபந்தனை

சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

சாத்தியமான எல்லா வழிகளிலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – என்கிறது சீனா

சாத்தியமான எல்லா வழிகளிலும் சிறிலங்காவுக்கு சீனா உதவியளிக்கும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான அதிகாரி வாங் யிங்கி உறுதியளித்துள்ளார்.

மகிந்த, கோத்தாவின் இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டது சரியே – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதற்கு, அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதே என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

13 ஆண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

காணி, காவல்துறை அதிகாரங்களை கோருகிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர்

1987ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டத்துக்கு அமைய கிழக்கு மாகாணசபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அகமத் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மக்கள் சமஷ்டியில் ஆர்வம் காட்டவில்லையாம் – லால் விஜேநாயக்க

வடக்கிலுள்ள மக்கள் சமஷ்டி ஆட்சிமுறையில் ஆர்வம் காட்டவில்லை என்று  அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டவாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.