மேலும்

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் ஐயோ

தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐயோ என்ற சொல், ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. ஒக்போர்ட் ஆங்கில அகராதியின் பிந்திய பதிப்பில், ஐயோ (Aiyo) என்ற சொல் உள்ளடக்கப்பட்டு அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்க கூட்டமைப்பு இணங்கவில்லை – சுமந்திரன்

தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை புதிய அரசியலமைப்பிலும் தொடர்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்தை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குகிறது சிறிலங்கா

தென்மாகாணத்தில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு, 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை ஆரம்பம்

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல், நாளை தொடக்கம் எதிர் வரும் 15ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

புலிகளுடன் தொடர்புடைய அகதிகளை பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது – சுவிஸ் அரசு

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்

இந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான,  சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

எட்காவில் கையெழுத்திடுவது குறித்து சிறிலங்கா அமைச்சவையே முடிவு செய்யும் – மகிந்த அமரவீர

இந்தியாவுடன், பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) கைச்சாத்திடுவது தொடர்பான இறுதி முடிவை சிறிலங்காவின் அமைச்சரவையே எடுக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் – மங்களவைச் சந்தித்தார்

பத்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா இராணுவத்தின் ஒழுக்கமீறல்களை அம்பலப்படுத்தும் முன்னாள் கடற்படை அதிகாரி

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர்.

கடலுக்கு அடியிலான இணைப்பு மூலம் சிறிலங்காவுக்கு மின்சாரம் – இந்தியா ஆலோசனை

சிறிலங்காவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் வகையில் கடலுக்கு அடியில் மின்சார பரிமாற்ற கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார்.