மேலும்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 சிறிலங்கா காவல்துறையினர் கைது

கொக்குவில்- குளப்பிட்டிச் சந்தியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணமானதாக தெரியவந்துள்ளது.

சிறிலங்காவில் ஆண்களை விட பெண்களின் ஆயுள்காலம் 6.6 ஆண்டுகள் அதிகம்

சிறிலங்காவில் ஆண்களை விட பெண்களின் சராசரி ஆயுள்காலம், 6.6 ஆண்டுகள் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அகதிகள் நாடு திரும்புவதற்கான கப்பல் வசதி – வாக்குறுதியில் இருந்து நழுவுகிறது இந்தியா?

சிறிலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாயகம் திரும்ப விரும்பினால், இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கு ஜூரிகள் சபைக்கு மாற்றப்படுமா? – அடுத்த வாரம் முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை, ஜூரிகள் சபையில் விசாரணை செய்வதா என்பது குறித்து வரும் 27ஆம் நாள் உத்தரவு பிறப்பிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வடக்கில் படைக்குறைப்பு செய்ய வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

வடக்கில் படைக்குறைப்புச் செய்து, நல்லிணக்க முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

கவிஞர் கி. பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017’

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி.பி.அரவிந்தன்’ அவர்களின் நி்னைவாக புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டியை, காக்கைச் சிறகினிலே மாத இதழ் அறிவித்துள்ளது.

பூகோள பொருளாதார உறுதிப்பாட்டுக்கு இந்திய மாக்கடலின் பாதுகாப்பு முக்கியம் – அமெரிக்கா

இந்திய மாக்கடலின் பாதுகாப்பு  பூகோள பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சம்பூரில் சூரியசக்தி மின் திட்டம் – சிறிலங்கா அதிபரிடம் இந்தியா யோசனை

திருகோணமலை- சம்பூரில் சூரியசக்தி மின்உற்பத்தித் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல் மின் திட்டத்தை கைவிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்து ஒரு மாதம் கழித்து இந்தியா இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் கொழும்பு வருகிறார்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் வர்த்தக, முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே, வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்றுடன் அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.