மேலும்

ஈரான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த சில வாரங்களில், தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியா நோக்கி விரையும் சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள், இந்தியக் கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.

இளம் ஊடகவியலாளர் அஸ்வினின் உடல் மாதகலில் நல்லடக்கம்

உக்ரேனில் காலமான இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர வரைஞருமான அஸ்வின் சுதர்சனின் இறுதிநிகழ்வு நேற்று மாதகலில் இடம்பெற்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையைக் கைப்பற்றுகிறது சீன நிறுவனம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகள் கையளிக்கப்படவுள்ளன.

யாழ். மாணவர்கள் கொலை – ஐந்து சிறிலங்கா காவல்துறையினருக்கும் விளக்கமறியல்

கொக்குவில் – குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சிறிலங்கா காவல்துறையினரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னொரு பாகிஸ்தானாக மாறும் சிறிலங்காவும் இந்தியாவின் கரிசனையும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அவன்கார்ட் ஊழல் வழக்குத் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறானது என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை விடுத்து அடுத்த நாள், அதாவது கடந்த 13ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை  இந்திய உயர் ஆணையாளர் வை.கே.சின்ஹா சந்தித்தித்திருந்தார்.

இந்திய – சிறிலங்கா கடற்படைகள் கடல் எல்லையில் சந்திப்பு

இந்திய – சிறிலங்கா கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளுக்கு இடையிலான 27 ஆவது அனைத்துலக கடல் எல்லைச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

உயிரை மாய்த்த புலனாய்வு அதிகாரி லசந்த கொலை நடந்த போது வீட்டில் இருந்தமை அம்பலம்

சண்டே லீடர் ஆசிரியரை தாமே சுட்டுக் கொன்றதாக கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி அந்தச் சமயத்தில் தனது வீட்டிலேயே இருந்தார் என்று உறுதிப்பட்டுள்ளது.

இந்திய-சிறிலங்கா இராணுவங்கள் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைப்பிரிவுகள் பங்கேற்கும், மித்ர சக்தி என்ற கூட்டுப் பயிற்சி அம்பேபுஸ்சவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவு தலைமையகத்தில் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கொக்குவில் படுகொலை – ஒரு மாணவனின் உடலில் இரு குண்டுக் காயங்கள்

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது நீதிவான் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.