மேலும்

சம்பந்தனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் நேற்று கவலை வெளியிட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்க வேண்டும் – கலாநிதி சரத் விஜேசூரிய

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, நீதிக்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சரத் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்

வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு இடமேயில்லை – அஜித் பெரேரா

சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு இடமேயில்லை என்று சிறிலங்காவின் பிரதி அமைச்சர், அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இராணுவம் அதிகாரத்துக்கு வருவதை புதுடெல்லி சகித்துக் கொள்ளாது

சிறிலங்காவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது, எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்ட கனடியத் தமிழருக்கு இழப்பீடு – சிறிலங்காவுக்கு ஐ.நா குழு உத்தரவு

கனடாவில் இருந்து சிறிலங்காவுக்கு சென்ற போது, கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு உத்தரவிட்டுள்ளது.

9 ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட மிகின்லங்கா

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மிகின்லங்கா விமான சேவை, ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவப் புரட்சி என்று படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி, சிறிலங்கா படையினரை கேவலப்படுத்த வேண்டாம் என்று கூட்டு எதிரணியினரிடம் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.

ஐ.நாவில் சிறிலங்காவின் படுதோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும் அறிவித்தது.

வரும் மே 12இல் சிறிலங்காவில் ஐ.நா வெசாக் நாள் நிகழ்வு – மோடியும் பங்கேற்கிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும், ஐ.நா வெசாக் நாள் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு மே 12ஆம் நாள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் என்று,  சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.