மேலும்

சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர் பேச்சு

அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர், ரோமன் குவாட்வ்லீக் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்காமல் தப்பிக்க சிறிலங்கா முயற்சி – அமெரிக்க நிபுணர் சந்தேகம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் அன்ரனியோ வகையைச் சேர்ந்த, ஈரூடக போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் சோமசெற், USS Somerset (LPD-25) திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

புலிகள் மீதுள்ள சிங்கள மக்களின் வைராக்கியமே வடக்கு மக்கள் மீது குறை கூறுவதற்குக் காரணம்

விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் காணப்படும் வைராக்கியமே, வடக்கு மக்கள் எதனை செய்தாலும் அவர்கள் குறை சொல்லுவதற்குக் காரணம் என்று  வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை?

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து கடந்த செப்ரெம்பர் மாதம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக, இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று, சட்டமா அதிபரிடம், சிறிலங்கா அதிபர் செயலகம் அறிக்கை கோரியுள்ளது.

அணுமின் நிலையத்துக்கு இடம் தேடுகிறது சிறிலங்கா

சிறிலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

வரும் 28 ஆம் திகதி சீன அரச தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த

நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீன அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

மகிந்தவின் ஆலோசகராக 10 ஆண்டுகள் பணியாற்றிய வாசுதேவவின் மனைவி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தனது மனைவி, அதிபர் செயலகத்தில் ஆலோசகராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார் என்பதை, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஒப்புக் கொண்டுள்ளார்.

கொழும்பில் இன்று சிறப்பு செய்தியாளர் மாநாட்டை நடத்துகிறார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் இன்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்.