மேலும்

தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சிசிர மென்டிஸ் நாளை பதவியேற்கிறார்

ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது பதவியை ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் மேடையில் ஏறிய மைத்திரியின் அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்

மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான கலை மற்றும் கலாசார அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அவமானப்பட நேர்ந்துள்ளது.

வடக்கில் சட்டவிரோத சுவரொட்டிகளாம் – 1980களின் நிலை திரும்புவதாக எச்சரிக்கிறார் கோத்தா

வடக்கில் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இந்த நிலை நீடித்தால், அங்கு 1980களில் ஏற்பட்ட நிலை ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

வெள்ளை வான் குறித்து கோத்தாவுடன் தொலைபேசியில் பேசிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்  கோத்தாபய ராஜபக்சவிடம், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா விளக்கமளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் நடக்கும் சுவரொட்டிப் போர்

சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரதவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தினமும் சுவரொட்டி தொடர்பான இழுபறிப் போர் ஒன்று நடந்து வருகிறது.

சிறிலங்காவில் ஜனநாயகம் பலம் பெறுமா? – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிக ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் நாடாளுமன்றைக் கலைத்தார்.

சிறிலங்காவின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளை மீண்டும் அம்பலப்படுத்துகிறார் யஸ்மின் சூகா

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகாவின் தலைமையிலான சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பு, சிறிலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்த அறிக்கை ஒன்றை இந்த வாரம் வெளியிடவுள்ளது.

புதிய திட்டங்கள் தொடர்பாக சிறிலங்காவுடன் பேசுகிறதாம் சீனா

சிறிலங்காவில் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் சினா பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு லண்டனில் இருந்து வந்துள்ள எச்சரிக்கை

சிறிலங்கா விமானப்படையினரால் நடத்தப்படும் உள்நாட்டு விமான சேவையான ஹெலி ருவர்ஸ் விமானங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று, பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஏழு ஆசனங்களையும் தாருங்கள், இறுதித்தீர்வைப் பெற்றுத் தருவோம் – யாழ்ப்பாணத்தில் சம்பந்தன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குங்கள்,  அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.