மேலும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்

சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act)  சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன.  

திருகோணமலை அபிவிருத்தி திட்டங்கள்: இந்தியா- சிறிலங்கா கூட்டுச் செயலணி அமைக்கப்படும்

திருகோணமலையில் வீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய அபிவிருத்தி,  துறைமுக மற்றும் ஏனைய தொழிற்துறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து கூட்டு செயலணி ஒன்றை அமைக்கவுள்ளன.

சிறப்புப் பொறிமுறைக்குத் தலைமையேற்கத் தயார்- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, அதனை நிறைவேற்றுவதற்கான பொறிமுறைக்கு தலைமையேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் யோசனை இல்லையாம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சி்றிலங்கா இராணுவத் தளபதியாகவோ, ஒட்டுமொத்தப் படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழியவில்லை என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு நடத்த இணக்கம்

தெற்காசியாவில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தவுள்ளன.

முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடக்கு, கிழக்கு பகுதிகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முற்றாகச் செயலிழந்துள்ளன.

சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்?

முப்படைகள், காவல்துறையை உள்ளடக்கிய வகையில், ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களையும் கவனிக்கும் உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பந்தனுடன் பிரித்தானியத் தூதுவர் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிசுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.