மேலும்

முன்னாள் போராளிகளை உள்ளீர்க்க தமிழ் அரசுக் கட்சி முடிவு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தமது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளது.

கொள்ளுப்பிட்டியில் அமெரிக்காவின் உயர் திறன் கண்காணிப்பு மையம்?

கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மோடியின் சிறிலங்கா பயணம் – புலனாய்வு அமைப்புகள் விழிப்பு நிலையில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, புலனாய்வு அமைப்புகள் உச்ச விழிப்பு நிலையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கிய வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா கடற்படை

மன்னார்- முள்ளிக்குளத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா கடற்படை இணங்கியுள்ளது.

மோடியின் பயணத்தின் போது உடன்பாடுகள் கையெழுத்திடப்படாது – சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது. எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் மாமனிதர் சிவராம் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

நிலைமாறும் உலகில் இந்தியா – லோகன் பரமசாமி

சிறீலங்காவின் அரசியல் போக்கில் கீழிருந்து மேலாக அரசை மக்கள் ஏற்று கொள்ள வைக்கும் பொறிமுறையை உருவாக்கும் அதேவேளை, மேலிருந்து கீழான பொறிமுறையை உருவாக்கும் பொருட்டு இலகு கடன் வசதி, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் அதிகார கட்டமைப்புகளை அமைக்க வசதி செய்தல், போன்ற திட்டங்களை உருவாக்குவதன் ஊடாக மேலைத்தேய அரசுகள் தமது மூலோபாய மேலாதிக்க நலன்களை பெற்று கொள்ள முனைவதை காண

சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்க சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லையாம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியைவழங்குவதற்கோ , தொழிற்சங்க நடவடிக்கைகளால் அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, நிலைமையைக் கையாள்வதற்கான  குழுவுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கோ சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லை என்று அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை

சிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவ பேருந்து மீது கல்வீச்சு

முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்றுமுன்தினம் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.