மேலும்

சனியன்று சீனா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் மே 13 ஆம் நாள் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் மீண்டும் திருத்தம் – குத்தகைக் காலம் குறைப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் மேலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படும் – சிறிலங்கா பிரதமர்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய சொத்துக்களை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுக்குனு விற்பனை செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்- 

சிறிலங்காவில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்கு 6000 காவல்துறையினர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான சிறப்பு பாதுகாப்பில், 6000 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

குற்றவாளிகளின் கூடாரமாக பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா தூதரகங்கள் – ஒப்புக்கொள்ளும் சிறிலங்கா அரசு

சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான புகலிடமாக வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கு – மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கவுள்ளது

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, மேல்நீதிமன்ற அமர்வு ஒன்றை நியமிக்குமாறு,  சிறிலங்காவின் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பிடம், சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு – கூட்டமைப்பு அதிர்ச்சி

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு, மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு தடையாகவும், மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் மேலும் இடம்பெற வழிசமைக்கும் ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

இரண்டு மாத சரிவுக்குப் பின் மீண்டும் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள் வருகை

கடந்த  மாதங்களில் சரிவைக் கண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவைக் கண்காணிக்க வருகிறார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், கண்காணிப்பதற்கும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது மற்றொரு பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சுல்பிகார் என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.