மேலும்

சம்பூரில் உயிருடன் கரையொதுங்கிய 20 திமிங்கலங்கள்

திருகோணமலை – சம்பூரில் 20 இற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும் சிறிலங்காவில் கொட்டிய கடும் மழையைத் தொடர்ந்து, சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின.

குண்டுப் புரளி கிளப்பிய இலங்கையரால் மலேசிய விமானம் மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கம்

மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சீன நீர்மூழ்கிக்கு கொழும்பு அனுமதி மறுத்ததில் இந்தியாவின் தலையீடு இல்லை – அட்மிரல் லன்பா

சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்து செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்த விடயத்தில் இந்தியா செல்வாக்குச் செலுத்தவில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

3 பிரதியமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

சிறிலங்காவில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சற்று முன்னர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேரைப் பலியெடுக்கும் புகையிலை

சிறிலங்காவில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் பேர் புகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் மரணமாவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உருத்திரகுமாரன் வேண்டுகோள்

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான வழிகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் – சீன நிறுவனத்துடன் மீண்டும் நாளை பேச்சு ஆரம்பம்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக, சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன், சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் நாளை பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது.

தெற்கில் வெள்ளம், வடக்கில் வரட்சி – சிறிலங்காவில் தொடரும் துயரம்

சிறிலங்காவின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வரட்சி நீடிப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

ஜப்பான் செல்கிறார் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் பத்து நாட்கள் அவர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர நியமனம்

சிறிலங்கா அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.