மேலும்

வடக்கில் கொட்டும் பெருமழை – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதி

சிறிலங்காவில் கொட்டி வரும் பெரு மழையினால், ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக வடக்கு மாகாணம் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

காயம்பட்ட முல்லைத்தீவின் அழகு – இந்திய ஊடகவியலாளர்

போரின் போது இருந்த ஊரடங்குக் கலாசாரமானது தற்போதும் வடக்கில் தாக்கத்தைச் செலுத்துவதைக் காணலாம். அதாவது வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் சூரியன் மறையும் நேரத்தில் பூட்டப்படுவதானது ஊரடங்கின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமன ஆவணங்களை கையளித்தார் சிறிலங்காவின் புதிய தூதுவர்

இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் எசல வீரக்கோன், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது நியமனம் தொடர்பான ஆவணங்களை அதிகாரபூர்வமாக கையளித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு,கிழக்கு – இன்று கடும் மழை, சூறாவளி எச்சரிக்கை

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி வரும் நிலையில், வடக்கு கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தினால், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெருமழை பெய்து வருகிறது.

அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் சமந்தா பவர்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான, தூதுவர் சமந்தா பவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திலக் மாரப்பனவின் மறுபக்கம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச  43வது பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த போது, இந்த விடயத்தில்  பணிவாக நடந்து கொள்ளுமாறு ரணிலுக்கு ஆலோசனை வழங்கியது மாரப்பனவே ஆவார்.

153 பேர் கொல்லப்பட்ட பாரிஸ் தாக்குதல் – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

பிரான்ஸ் தலைநகர்  பாரிசில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதலில், குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என்று, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கவில்லை – இந்திய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்காப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகள் பேச்சு

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக சிறிலங்கா – அமெரிக்க கடற்படைகளுக்கு இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாரிஸ் கலையரங்கு தாக்குதலில் மட்டும் 100 பேர் பலி – பணயக் கைதிகள் அதிரடியாக மீட்பு

பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல்களில் 140இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதேவேளை, பாரிசின் Bataclan arts centre  கலையரங்கில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 100இற்கும் அதிகமானோரை அதிரடித் தாக்குதல் மூலம் பிரெஞ்சுக் காவல்துறை இன்று அதிகாலை மீட்டுள்ளது.