மேலும்

சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்

‘சிறிலங்கா விற்பனைக்கு விடப்பட்டுள்ளதா?’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதித்து வருகிறது’ என பி.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது.

லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவின் திட்டத்தில் இணைந்ததற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை- ரவி கருணாநாயக்க

சீனாவின் பாதை மற்றும் அணை திட்டத்தில் சிறிலங்கா இணைந்து கொண்டமை குறித்து, இந்தியா கவலை தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் அமையவுள்ள சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம்

சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர், இதனைக் கூறினார்.

2020இல் சிறிலங்காவில் புகையிலை உற்பத்திக்குத் தடை

சிறிலங்காவில் புகையிலை உற்பத்தி வரும் 2020 ஆண்டில் முற்றாகத் தடை செய்யப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எனது ஆணையை மீறியே காங்கேசன்துறையில் இருந்து இரும்பு எடுத்துச் செல்லப்பட்டது – தயா ரத்நாயக்க

இராணுவத் தளபதியாக இருந்த தனது ஆணையை மீறி ஒரு குழுவினர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பாரிய இயந்திரங்களை உடைத்து, பழைய இரும்புக்காக விற்பனை செய்தனர் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க சாட்சியம் அளித்துள்ளார்.

நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு விளக்கமளித்தார் சிறிலங்கா பிரதமர்

ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார் முதலமைச்சர் – விவாதம் ஒத்திவைப்பு

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவாதத்தை வரும் 9ஆம் நாள் நடத்துவதற்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் – பரபரப்பான சூழலில் இன்று கூடவுள்ளது வடக்கு மாகாணசபை

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

கட்டாரில் விமான நிலையம், வணிக நிறுவனங்களில் முண்டியடிக்கும் கூட்டம் – இலங்கையர்கள் அச்சம்

கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.