மேலும்

யாழ்ப்பாணத்தில் போரை நடத்திய பிரிகேடியர் மிஸ்ராவுக்கு அருணாசல பிரதேச ஆளுனர் பதவி

இந்திய அமைதிப்படை சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய முக்கிய கட்டளை அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் பி.டி மிஸ்ரா, அருணாசல பிரதேச மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனி, பின்லாந்து செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் அடுத்தவாரம் புதுடெல்லி பயணம்

வடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் புதுடெல்லிக்கு அடுத்த வாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். புதுடெல்லியில் நடக்கவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்கவே, வட மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு

பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது.

கடற்படைத் தளபதிக்கு ஒரு மாதமே சேவை நீடிப்பு – பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியம்

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு, ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரமே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் மீது திரும்பும் சீனாவின் அக்கறை

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதில் சீனா அக்கறை கொண்டுள்ளதாக,  சமகால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன பட்டுப்பாதை சிந்தனை குழாமின் பணிப்பாளர் நாயகம் ஜின் ஷின் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

ஆசியப் பிராந்தியத்தில் மூத்த குடிமக்களின் தொகை வேகமாக அதிகரித்து வரும் நாடாக சிறிலங்கா மாறி வருகிறது. இதனால் பல்வேறு தீவிர சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர் லசந்த கணேவத்த தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஏற்றுமதித் தடை – சிறிலங்காவுக்கு ஆபத்து

சிறிலங்காவில் இருந்து கடலுணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதிக்கும் நிலை ஏற்படலாம் என்று சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.

போரில் குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முன்வரமாட்டேன் – சரத் பொன்சேகா

எனது கட்டளைக்கேற்ப போர் செய்த எவரையும் தண்டிக்க இடமளிக்கமாட்டேன், அதேவேளை, போரில் குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முன்வரமாட்டேன்  என்று சிறிலங்கா அமைச்சரான  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சிறிலங்காவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்- அமெரிக்க துணை தூதுவர்

சிறிலங்காவில் அமெரிக்க நிறுவனங்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு இதுவே சரியான நேரம் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.