மேலும்

அரசியல் கைதிகளின் குடும்பத்தினரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

சட்டமா அதிபரும், நீதி அமைச்சரும் வெளிநாடு சென்றிருப்பதால், அடுத்தவாரம் நாடு திரும்பிய பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறி, அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும், தமிழ் அரசியல்பிரமுகர்களையும் சிறிலங்கா அதிபர் வெறும் கையுடன் திருப்பி அனுப்பியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தோனேசியப் போர்க்கப்பல்

இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.

கூட்டறிக்கைக்குப் பின்னால் மகாநாயக்கர்களே உள்ளனர் – அஸ்கிரிய பீடத்தின் செயலாளர்

அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களும், இரு பீடங்களின் காரக சங்க சபாவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்குப் பின்னால் இருப்பதாக அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மக்களை தவறாக வழிநடத்த முயற்சி – ஊடகங்கள் மீது சிறிலங்கா பிரதமர் பாய்ச்சல்

புதிய அரசியலமைப்புக்கு அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக, ஊடகங்கள் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை உடன் நிறுத்தக் கோருகிறது சங்க சபா

புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த காரக மகா சங்க சபா கோரியுள்ளது.

சிறிலங்காவின் தென்பகுதியை நேற்றிரவு கலங்கடித்த வெடிப்பும் ஒளிப்பிளம்பும்

சிறிலங்காவின் தென்பகுதியில் நேற்றிரவு கேட்ட பாரிய வெடிப்புச் சத்தம் மற்றும் திடீரெனத் தோன்றிய ஒளிப்பிளம்பினால் மக்கள் மத்தியில் பதற்றமான நிலை காணப்பட்டது.

மீண்டும் போட்டியிட்டால் மைத்திரியைத் தோற்கடிப்போம் – ஜேவிபி எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என்று ஜேவிபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மன்னாரில் புதிய சிறைக்கூடம் அமைக்க அமைச்சரவை அனுமதி

மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கான பத்திரத்தை அமைச்சர் சுவாமிநாதன் சமர்ப்பித்திருந்தார்.

ஜே.ஆரின் பேரன் அரசியலில் குதிக்கிறார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரன், பிரதீப் ஜெயவர்த்தன அரசியலில் குதிக்கவுள்ளார் என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்தல விமான நிலையம் குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை – மகிந்த அமரவீர

மத்தல விமான நிலையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.