மேலும்

சுதந்திரக் கட்சிக்கு காத்திருக்கும் பேரிடி – 7 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்ற வாய்ப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியுடன் நிபந்தனையுடன் பேசத் தயாராகிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை – விக்னேஸ்வரன்

வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் அலோசியஸ், பலிசேனவிடம் 12 மணிநேரம் விசாரணை – விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுள்ள பேர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையானரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது டுபாயில் சிக்கினார் உதயங்க வீரதுங்க

டுபாயில் நேற்று கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

இன்று கொண்டாடப்படும் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார்.

இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று சிறிலங்காவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்

சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

டக்ளசுக்கு எதிரான சாட்சியங்களை முன்னிலைப்படுத்த தவறிய காவல்துறை அதிகாரிக்கு பிடியாணை

சூளைமேடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபி செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக, சாட்சிகளையும், சான்றுகளையும் முன்னிலைப்படுத்தத் தவறிய காவல்துறை அதிகாரிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.