மேலும்

இந்திய மாநிலங்களின் அதிகாரங்களையே நாமும் கேட்கிறோம் – சென்னையில் சம்பந்தன் தெரிவிப்பு

இந்தியாவில் மாநிலங்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை நாமும் பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் நேற்று மாலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பூசா இராணுவ முகாமுக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்திய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்

கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்த்தல் – யதீந்திரா

[சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு] எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ் 2014ம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் மீதான ஒரு பிரதிபலிப்பாகவே, இக்கட்டுரை அமைகிறது.

வடமாகாணத்தின் நீர்வளமும் இரணைமடுக்குளமும் – யாழ்குடாநாட்டிற்கு குடிநீர் வழங்கலும்

ஏன் இரணைமடுக்குளத்தின் நீர் ஓர் அரசியல் மேடைக்குரிய விடயமாக மாறியுள்ளது? இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டிற்கு குடிநீரினை வழங்குவதற்கான திட்டம் புதிய முயற்சியா அல்லது முன்னைய முயற்சியின் தொடர்ச்சியா?

‘அரசியல் என்பது தொடர்பறாத போராட்டத்தின் மற்றுமொரு வடிவம்’ – தமிழ் மக்களின் வாக்களிப்பு வழங்கும் செய்தி

இலங்கைத்தீவின் வடக்கில் தமிழ்மக்கள் எந்தவிதமான பாரிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டிராமல் மிகப்பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்

முத்தரப்பு உடன்படிக்கையானது, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டுமல்லாது, தொடர்பாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறைமைகளையும் நடைமுறைப்படுத்த வழிசமைக்கிறது.

அபிவிருத்தி: மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? – பேரா. என். சண்முகரத்தினம்

2009 ஆண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் “அபிவிருத்தியே” இன்றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தினர்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு கூட்டமைப்பில் இணைய வேண்டும் – முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

அது தமிழர் தேசியக் கூட்டமைப்பு அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவன செய்ய வேண்டும்.

பொங்கல்’ – நம் சிந்தனைக்கான சில குறிப்புகள்…

தைப்பொங்கல் – தமிழர் திருநாள் – புலம்பெயர் தமிழர் திருநாள் தைப்பொங்கல் :  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை.

மேலைதேய சனநாயக பண்புகளும் சிறீலங்காவின் தற்காப்பு உத்திகளும் – 02

ஒருஅரசின் கட்டமைப்பு குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் இன்னொரு அரசினால் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் கட்டுக்குலைந்து பிரிவினைக்கு தோல்விகண்ட அரசு இன்னொரு அரசைப்பாதிக்கும் தொற்று நோயாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த அரச இயந்திரங்கள் ஒன்றையொன்று பாதுகாத்து கொள்கின்றன.