மேலும்

சண் மாஸ்டர் இந்தியாவுக்குத் தப்பிவிட்டாராம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்கு சாட்சியப் படிவங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மீரியபெத்தவில் இன்று 2 சடலங்கள் மீட்பு – உதவ வருகிறது பாகிஸ்தான் இராணுவக்குழு

மலையகத்தில் நிலச்சரிவில் சிக்கிய மீரியபெத்த தோட்டத்தில், மண்ணுக்குள் புதைந்து போன இருவரின் சடலங்கள் இன்று  நடத்தப்பட்ட தேடுதலின் போது மீட்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைப்பு)

திருப்பதி சென்ற சிறிலங்கா பிரதமருக்கு திருத்தணியில் கருப்புக்கொடியுடன் எதிர்ப்பு

சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருத்தணியில் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்க முனைகிறது சிறிலங்கா – ஐ.நா குற்றச்சாட்டு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்கும் சிறிலங்காவின் முயற்சி, அரசாங்கத்தின் நேர்மையின் மீது கேள்விகளை எழுப்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்- ஹூசெய்ன்  விசனம் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்றடைந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு

சென்னையில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மணிப்பால் செல்கிறார் சிறிலங்கா பிரதமர் – கர்நாடகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்ன நாளை மணிப்பால் செல்லவுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை – எரிக் சொல்ஹெய்ம் வரவேற்பு

ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார்.

நிலச்சரிவில் அநாதரவான சிறுவர்களை வட மாகாணசபையிடம் ஒப்படைக்க சிறிலங்கா மறுப்பு

மலையகத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களை வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

காற்றில் பறந்த கோத்தாவின் வாக்குறுதிகள் – நிறைவேற்றும்படி மன்னார் ஆயர் கோரிக்கை

முள்ளிக்குளத்தில் கடற்படையினர் தளமிட்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மாற்று இடங்களில் மீளக்குடியேற்றுவதாக  வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாயய ராஜபக்சவிடம், மன்னார் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிரியாவுக்குச் செல்ல முயன்ற மாலைதீவு ஜிகாதிகள் சிறிலங்காவில் கைது

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்குச் செல்வதற்காக சிறிலங்கா வந்த மூன்று மாலைதீவு பிரஜைகள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.