மேலும்

புதிய அரசின் மீது அதிகரிக்கும் தமிழ்மக்களின் அதிருப்தி – ஆங்கில ஊடகம்

தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமானது தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியிலும் இது தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

19வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல்- சிறிலங்கா அதிபர்

19வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மேற்பார்வையின் கீழேயே உள்ளக விசாரணையை நடத்த வேண்டும்- சுமந்திரன்

போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணை ஒன்று இடம்பெறுமானால், அது அனைத்துலக மேற்பார்வையின் கீழேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மோடி சொல்வதையெல்லாம் செய்ய முடியாது – என்கிறது சிறிலங்கா

அண்மையில் சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியிருந்தாலும், அதனை செய்ய வேண்டிய கட்டாயம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரெரா தெரிவித்தார்.

வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளே மகிந்தவை தோற்கடித்தன – என்கிறார் கோத்தா

சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச ஆட்சியை அகற்றுவதில் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளின் தலையீடுகள் இருந்துள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கீரிமலையில் மோடியுடன் கைகுலுக்கிய பல்கலைக்கழக மாணவன் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கைகுலுக்கிய பல்கலைக்கழக மாணவன் ஒருவர் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

யேர்மனியில் தமிழாலயம் பள்ளிகளை உருவாக்கிய இரா.நாகலிங்கம் ஆசிரியர் காலமானார்

யேர்மனியின் தமிழ் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஆசிரியர் நேற்றுமுன்தினம் முற்பகல் 10 மணியளவில் காலமானார்.திரு. நாகலிங்கம் தன் சொந்த முயற்சியால் யேர்மனியில் உள்ள ஹேகன் நகரில் 1986ல் தமிழ் பாடசாலை ஒன்றை நிறுவினார்.

சிறிலங்கா தொழிற்கட்சியின் மூலம் பிரதமர் பதவிக்குப் போட்டியிட மகிந்த முடிவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்காக, சிறிலங்கா தொழிற்கட்சி மூலம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

திருகோணமலையில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ‘நினைவுகளில் கி.பி.அரவிந்தன்’ என்னும் தலைப்பில்,’நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சீன முதலீட்டாளர் நலன்களை சிறிலங்கா பாதுகாக்க வேண்டும்- வலியுறுத்துகிறது சீனா

சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்குமாறும், சிறிலங்காவிடம், சீனா இன்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.